கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள ‘பி.டி. சார்’ திரைப்படம், ஹிப்ஹாப் தமிழா, காஷ்மிரா, தியாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ள படமாக, கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

எனினும், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இதனை வெற்றிப் படமென கூறியிருக்கிறார்.“எங்களின் ‘பி.டி. சார்’ படத்தின் வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.இன்று நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை மக்கள் நேசிக்கும்படி வழங்கிய படக்குழுவினருக்கு எங்களது நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் உண்மையிலேயே பலனாகியுள்ளது. மேலும், உங்களின் எதிர்கால முயற்சிகளில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.’பி.டி. சார்’ திரைப்படம் தற்போது இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.