போஸ் வெங்கட், சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு, “கன்னி மாடம்” படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, அவர் விமல் நடிப்பில் “சார்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் வெற்றிமாறன், “சார்” படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக, “விடுதலை 2” படத்தின் படப்பிடிப்பின் பின்னணியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, நடிகை மஞ்சு வாரியர் இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.