
பிரபல ஹாலிவுட் நடிகை மேகி ஸ்மித். இவர் ‘தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி’, ‘ஹாரி பாட்டர்’, ‘டோவ்ன்டன் அபே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக ஹாரி பாட்டர் படங்களில் இவர் ஏற்று நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது 89-வயதான இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்..