Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிரபல தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் மிகுந்த வெற்றியடைந்த “அர்ஜூன் ரெட்டி” படத்தின் ரீமேக்கான “ஆதித்யா வர்மா” மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர், தனது தந்தை விக்ரம் உடன் இணைந்து “மகான்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது, துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “பைசன்” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, தெலுங்கில் “ஆர்எக்ஸ் 100”, “மகாசமுத்திரம்”, “மங்களவாரம்” போன்ற படங்களை இயக்கிய அஜய் பூபதி இயக்கத்தில் துருவ் விக்ரம் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News