Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு அழைப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அதன் பின்னர், மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலகின் பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் விழாவுக்கும் ரஜினிகாந்துக்கு அழைப்பு வந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பதிவியேற்பு விழா ஜூன் 12ம் தேதி நடைபெற உள்ளது.

சமீபத்தில் ரஜினி வேட்டையன் படப்பிடிப்பு முடித்துவிட்டு இமயமலை ஆன்மீக பயணத்துக்கு சென்று வந்தார். அதன் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News