Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் தீம் பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்! #ANDHAGAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரும்பி வந்து, படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் பிரசாந்த், ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில், தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், ‘அந்தகன்’ படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ஆம் தேதி வெளியிடுவார் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, ‘அந்தகன்’ படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News