Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிக்பாஸ் வீட்டில் காதல் சலசலப்பு… சூடுபிடிக்க ஆரம்பித்தது ஸ்கூல் டாஸ்க்! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இப்போது பாடசாலை டாஸ்க் வழங்கப்பட்டு, ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனியான கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று ராணவ், சக போட்டியாளர்களால் ஓரளவு ஒதுக்கப்பட்டார். இதற்கு காரணமாக, அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டது.

காலை முதலே போட்டியாளர்களின் மத்தியில் சலசலப்பு நிலவியது. இந்த சூழல், பவித்திரா மற்றும் ராணவ் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தீவிரமான பரபரப்பாக மாறியது. இதனால் கோபமடைந்த சத்யா, ராணவுடன் நேரடியாக சண்டை செய்வதற்கு முனைந்தார். வாக்குவாதம் தீவிரமடைந்ததால், தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் வாய் வார்த்தைகளால் தாக்கி பேசும் நிலை உருவாகியுள்ளது.

இந்த அமளியில் கடுப்படைந்த சௌந்தர்யா, “யாருடா லவ் பண்ணுறா?” என கொந்தளித்தார். அதனை தொடர்ந்து, மஞ்சரி பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர அனைவரையும் கூச்சலிட்டு அமைதிப்படுத்த முயன்றார். பிரபலங்கள் என்ற வகையில் தங்களை மறந்து, ஒவ்வொருவரும் ஒருவருடன் சண்டையில் ஈடுபடுவதைக் காண முடிந்தது. இன்றைய நாள் சுவாரஸ்யமான சண்டைகளால் நிரம்பியிருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

Read more

Local News