Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பிக்பாஸ் கொடுத்த மொட்ட கடுதாசி டாஸ்க்… மனதில் உள்ளதை கொட்டும் போட்டியாளர்கள்! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிகவும் பரபரப்பாக நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 8ல் இன்றைய ப்ரோமோக்களை பார்க்கும் போது “மொட்ட கடுதாசி” எனும் ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனதில் உள்ளதை தைரியமாக வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. “இது போனால் திரும்ப கிடைக்காது” என பிக் பாஸ் அறிவித்த நிலையில், போட்டியாளர்கள் தங்களின் மனக்குமுறல்களை காகிதத்தின் மூலம் வெளிப்படுத்தி தீர்த்துள்ளனர்.

அந்த மொட்ட கடுதாசிகளில் ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் சந்தோஷம் குறைவாக இருக்கிறது, மன உளைச்சலே அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக புதிய போட்டியாளர்களின் வரவையே குறிப்பிட்டு, சுனா பானா ஒட்டுமொத்த போட்டியாளர்களின் மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

மேலும், யுக்தி என்ற பெயரில் உள்ள பெண், மற்ற போட்டியாளர்களின் மனதிற்கு காயம் உண்டாக்கி வருவதாகவும், விரைவில் மக்கள் அவருக்கான தக்க தீர்ப்பை வழங்குவார்கள் எனவும் ஒரு எச்சரிக்கையை ஆடியன்ஸிற்கு வழங்கியுள்ளனர்.

அதாவது, அடுத்த நாமினேஷனில் அவள் சிக்குவாள் என்பதையும், மக்கள் விரைவில் இந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்ற உதவுவார்கள் என்பதையும் மறைமுகமாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News