Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

பிக்பாஸ் கொடுத்த கெத்து டாஸ்க்… கண்ணீரோடு முறையிடும் தர்ஷா குப்தா… #BiggBiss Tamil 8

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷா குப்தா சமைத்திருந்தார். அவர் உணவில் காரம் அதிகமாக போட்டுவிட்டார் என்றும், அதனால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டு விட்டது என்றும் போட்டியாளர்கள் கூறினார்கள். முத்துக்குமரன், ஜாக்குலின், சுனிதா, ஜெஃப்ரி உள்ளிட்டோர் இதனை கலாய்த்திருந்தார்கள். மேலும் ஜெஃப்ரிக்கு யாரும் வாக்கு அளிக்காமல் இருந்தநிலையில் 4வது இடத்துக்கு ஆசைப்பட்ட அவர் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் மிகவும் எமோஷனல் ஆனார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்று ப்ரோமோக்களில், யாரு கெத்து என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. அதாவது அறிவில்,‌ திறமையில் , டீம் வொர்கில் சிறந்தது என இரு அணிகளுக்கும் டாஸ்க் வைக்கப்படுகிறது. இதற்கு பரிசாக ஒரு நாமினேஷன் ப்ரீ என தெரிவிக்கப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து தர்ஷா குப்தா தான் சமைக்கும் உணவை வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்று அழுகிறார். மத்த ஹவுஸ்மேட்ஸ் சிலர் அவரை சமாதானம் செய்கிறார்கள்.

மேலும் விஜே விஷால் ஆண் அணியினரோடு  இருக்கும் போது நாங்கள் கலாய்த்தபோது சிரித்த நீ ஏன் இப்போது அழுதாய் என கேள்விக்கேட்டு அவரிடம் விளக்கம் பெறுகிறார். இப்படி டாஸ்க் அழுகை அறிவுரை என ப்ரோமோக்கள் வெளியாக இந்த நாள் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News