‘தி கோட்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக உள்ள வெங்கட் பிரபு பல பேட்டிகளை வழங்கி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது பிரபல இயக்குனராக வலம் வரும் பா.ரஞ்சித் பற்றிப் பேசினார்.

வெங்கட் பிரபு, “பா.ரஞ்சித் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர் இயக்கிய ‘மெட்ராஸ்’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு அரசியல் குறித்து அதிகம் தெரியாது, அதனால் அப்பாடங்களின் அரசியல் கருத்துகளை புரிந்து கொள்ள முடியவில்லை. ரஞ்சித்திடம் நான் கூறும் ஒரே விஷயம், அவர் கமர்ஷியல் படங்களையும் எடுக்க வேண்டும் என்பதே.

அவருக்குள் ஒரு திறமையான கமர்ஷியல் இயக்குனர் இருக்கிறார். அரசியல் கருத்துக்கள் உள்ள படங்கள் எடுத்தாலும், அவ்வப்போது கமர்ஷியல் படங்களையும் அவர் எடுக்க வேண்டும்,என்றுள்ளார் வெங்கட் பிரபு. பா.ரஞ்சித், வெங்கட் பிரபுவின் முதல் படமான ‘சென்னை 28’ படத்திலிருந்து உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.