ஜான் ஈ மன் (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிதம்பரம். அப்படம் வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழிலும் இப்படம் கோடிகளில் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.
இப்படத்திற்காக, நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினர். தொடர்ந்து, இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக இயக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிதம்பரம் இயக்கவுள்ள ஹிந்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில், நடிகர்கள் குறித்து அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.