Thursday, December 19, 2024

பாலா சாரின் பிதாமகன் படம் எனக்கு மனவலிமை கொடுத்தது – நடிகர் சிவகார்த்திகேயன்!‌

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ம் ஆண்டு திரைப்பயண விழா நடந்தது இதில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், பொங்கலுக்கு அஜித் சார் படம் வருது. வணங்கான் படமும் வரட்டும். ரெண்டு படமும் ஆங்கில எழுத்து V-லதான் ஆரம்பிக்குது. V-னா VICTORY. ரெண்டு படமும் மிகப்பெரிய வெற்றி அடைஞ்சு, 2025-ல தமிழ் சினிமாவிற்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கட்டும்‌.

மேலும் பேசிய அவர், அருண் விஜய் அண்ணன்தான் ‘நீ கண்டிப்பா இந்த விழாவுக்கு வரணும் தம்பி என்று அழைத்தார். அருண் விஜய் அண்ணன் எனக்கு ரொம்ப சீனியர். அவர் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முயற்சி செய்வதைதான் அவரோட உண்மையான வெற்றியாக பார்க்கிறேன்.

‘அமரன்’ படத்தில் நெகடிவ் எண்டிங் உள்ளது, தீபாவளிக்கு நெகடிவ் எண்டிங் உடன் ரிலீஸ் ஆகும் படம் ஓடாது என்று சொன்னார்கள். அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அப்போதுதான் பாலா சாரின் ‘பிதாமகன்’ படம் தீபாவளிக்கு வந்து ஹிட்டானது எனக்கு மனவலிமையை அளித்தது. அவரை கொண்டாடுகிற விழாவில் நான் இருப்பது எனக்கு பெருமை என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News