குரங்கு பொம்மை” இயக்குநர் நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து மாஸ் காட்டியதால், விஜய் சேதுபதி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில், விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார், இதில் நித்யா மேனனும் அவருடன் இணைந்து நடிக்கின்றார். முன்னதாக, இவர்கள் இருவரும் மலையாள படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது தமிழில் முதன்முறையாக ஜோடி சேரவுள்ளனர்.
“திருச்சிற்றம்பலம்” படத்திற்கு பிறகு, நித்யா மேனன் மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். மேலும், சமீபத்தில், தனுஷின் “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.