நித்யா மேனன் தமிழில் மிகச் சிறந்த நடிகையாக வரவேற்கப்பட்டு வருகிறார். தனுஷுடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக, 2022ல் அவர் தேசிய விருது வென்றார். இது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து, இதற்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, விஜய் சேதுபதி உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்க உள்ளார். இதற்காக அவர் சிறப்பான ட்ரெயினிங் எடுத்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ள நிலையில், படம் குறித்து நித்யா மேனன் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். கதைக்களம் மிகுந்த தனித்துவமாக இருப்பதாகவும், இதுபோன்ற கதைக்களத்தில் இதுவரை நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மலையாள படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததாகவும், அதில் அவர்களிடையே காம்பினேஷன் காட்சிகள் குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.