Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பவன் கல்யாண் படத்தின் பாடல் ஒன்றை பாடியுள்ள நடிகர் சிம்பு! #OG

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து உருவாகி வரும் படம் ‘ஓ.ஜி’. இதில் பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்ற இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்புவை பாட வைக்க தமன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இப்போது அது உறுதியாகி இருக்கிறது. தமன், தனது எக்ஸ் தளத்தில் சிம்பு மற்றும் இயக்குனர் சுஜித் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, “U know it & We call it The #OG Mass RAMPAGE SOON” என பதிவிட்டு, விரைவில் சிம்பு பாடிய பாடல் வெளியாகும் என மறைமுகமாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News