Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பள்ளியாக மாறிய பிக்பாஸ் வீடு… தன்ஷிகா சௌந்தர்யா மற்றும் ராணவ் இடையே வெடித்த சண்டை!!! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற இந்த வார நாமினேஷன் செயல்முறையில் அருண், முத்துக்குமரன், ரஞ்சித், தீபக், விஷால், பவித்ரா, சாச்சனா, ஆனந்தி, சுனிதா, அன்ஷிதா மற்றும் ஜாக்குலின் ஆகிய 11 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். இந்த டாஸ்க்கின் ஒரு பகுதியாக, வர்ஷினி அதிபராகவும், அருண் பிரசாந்த் உப அதிபராகவும், ஜாக்குலின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களாக இருக்கும் மற்ற போட்டியாளர்கள் இதுவரை எந்தவிதமான சேட்டைகளையும் ஆரம்பிக்காமல், அமைதியாக இருந்து வருகின்றனர். இந்த டாஸ்க்கின் மூலம் போட்டியாளர்களிடையே என்னென்ன சண்டைகள் வெடிக்கும் என்பது தொடர்ந்து வரும் எபிசோட்களில் தெரிந்துவரும். இந்நிலையில், இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News