2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்துப் வெளியான படம் ‘ரன்’. இந்தப் படத்தின் காலகட்டத்தில் வித்யாசாகர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சென்சேஷன் ஹிட் ஆகியிருந்தன.

ஆக்ஷன் படங்களுக்கு ட்ரெண்ட் செட்டராக அமைந்த ‘ரன்’, வெளியான 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்தம் புதிய பொலிவுடன் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.