ப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் தயாரிக்கும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தை புதுமுக இயக்குனர் பிரசாந்த் முருகன் இயக்கியுள்ளார். கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி ஆகியோர் நடித்துள்ளனர். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, மிருதுளா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கனிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜோஷ் பிராங்ளின் இசையமைத்துள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது.

அந்நிகழ்வில் நடிகை அபிராமி பேசும்போது, “
ஒரு சில படங்களே ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மை பயணிக்க வைக்கும்; இப்படம் அப்படித்தான். இதில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். எனக்கு மட்டுமல்ல, மொத்த குழுவுக்கும் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.