சன் மியூசிக்கில் விஜேவாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். அதில் மணிமேகலையுடன் சேர்ந்து அஞ்சனா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இதையடுத்து இருவருமே ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தனர்.


மணிமேகலை திருமணத்திற்கு பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைக்க, மறுபுறம் அஞ்சனா ஜீ தமிழில் செட்டில் ஆனார். அங்கு தொகுப்பாளராக பணியாற்றி, பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதுதவிர தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, சக்சஸ் மீட் போன்றவற்றிற்கும் அஞ்சனா தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
விஜே அஞ்சனா, தொகுப்பாளினியாக மட்டுமின்றி மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி, அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது இவர் வயல்வெளியில் பம்புசெட்டில் குளிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், கேப்ஷனாக ‘பம்ப் செட் குளியல், எந்த நேரமும் நீச்சல் குளம்’ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி டிரெண்டாகி வருகிறது.