முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ் ராயன், குபேரன் போன்ற படங்கள் நடித்து முடித்து இருக்கிறார். இதுபோக இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படி கடும் பிஸியாக இரவும் பகலும் நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்கார புறநானூறு படத்தில் நடிக்க தனுஷ் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் உலாவின.


இதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை 2 என அடுத்தடுத்து இரண்டாம் பாகம் படங்கள் லைன் அப்பில் வைத்திருக்கிறாராம். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கேப்டன் மில்லர். இப்படம் மிகப்பெரிய வெற்றியும் வரவேற்பும் பெற்றது.

ராயன் படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் அதன் பின் இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்சமயம் 40 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறனின் வடசென்னை அல்லது அண்ணன் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.