Sunday, January 26, 2025

பத்ம பூஷன் விருது பெறும் நடிகர் அஜித்குமார்… நடிகர் பாலய்யா மற்றும் நடிகை ஷோபனா ஆகியோருக்கும் விருதுகள் அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர்கள் அஜித் குமார், பாலகிருஷ்ணா, சேகர் கபூர், ஆனந்த் நாக், நடிகை ஷோபனா ஆகியோருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் கலை, அறிவியல், சமூகப்பணி, பொதுப்பணி, வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அந்த முறையிலேயே இந்த ஆண்டிற்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் கலைத்துறையில் சிறப்பாகப் பெருமை சேர்த்ததற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மற்றும் நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளது.அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித், இன்று 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். திரைப்படத்துறையைத் தவிர, கார் ரேசிங் போன்ற துறைகளிலும் தன்னை வெற்றி வீரராக நிலைநிறுத்தியுள்ளார். இந்நிலையில், கலைத்துறையில் அவரது திறமையை பாராட்டும் விதமாக இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News