தமிழ் சினிமாவில் ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ்குமார், தொடர்ந்து பல படங்களில் ஹிட் பாடல்களை வழங்கி மக்களிடம் கவனம் ஈர்த்தார். ‘டார்லிங்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பல நல்ல படங்களை வழங்கியுள்ளார்.இந்த ஆண்டில் மட்டும் அவரின் ‘ரெபல்’, ‘கள்வன்’, ‘டியர்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன.
இவர் நடிப்பில் விரைவில் தற்போது வெளிவர இருக்கும் ‘கிங்க்ஸ்டன்’ படம், அவரது 25-வது படமாகும்.இது குறித்து பேசியுள்ள ஜி.வி. பிரகாஷ்குமார் “இந்த ஆண்டு எனக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்துள்ளது. விரைவில் ‘கிங்க்ஸ்டன்’ படம் வெளியாக இருக்கிறது. இது எனது திரை பயணத்தில் மிகுந்த பட்ஜெட்டில் தயாராகும் படம். இதில் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.
நான் நினைப்பதெல்லாம் சினிமாவில் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயமாக கிடைக்கும். நேர்மையாக உழைத்தால் சினிமா நம்மை விட்டு விடாது. என் தேடல் தற்போது சினிமாவிலேயே உள்ளது. நடிப்பிலும், இசையிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என் இலக்கு,” என்றார் ஜி.வி. பிரகாஷ்குமார்.