Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நேரா ஆக்சன் தான்… கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட #SURIYA 44 படப்பிடிப்பு அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

சூர்யா இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டது.அதேபோல் வில்லனாக உறியடி விஜய் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்களை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

முதற்கட்டமாக அந்தமானில் துவங்கும் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதற்காக அங்கு பிரமாண்டமான செட் அமைக்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News