கீர்த்தி ஷெட்டி உப்பெண்ணா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அந்த ஒரு படத்தில் மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் மனதில் தன்னுடைய தனித்துவத்தை உறுதிப்படுத்தினார். அதன் பின்னர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக, அவர் நடித்த “வாரியர்” திரைப்படம் தமிழிலும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
சூர்யாவின் “வணங்கான்” படத்திலும் அவர் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், சூர்யா அந்தப் படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டியும் அந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால், தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தற்போது, ஜெயம் ரவி நடிக்கும் “ஜீனி” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழ் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நீல நிற மார்டன் புடவையில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பரவலான கவனத்தை பெற்றுள்ளன.