டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தற்போது நாயகனாக அறிமுகமாகியுள்ளார். சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பாராட்டினர்.இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நாயகனாகவும், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக மோனிஷா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.