தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா, ஒருபுறம் நாக சைதன்யாவுடன் விவாகரத்து, மற்றொரு புறம் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் காரணங்களால் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். தற்போது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு, ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஒரு ரசிகர் சமந்தாவிடம் “இப்போதெல்லாம் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா என கேட்டார்.

அதற்கு பதில் அளித்து சமந்தா, “இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் முழுமையாக எனக்கு தெரியாமல் செய்தவை. அதன் பிறகு அவற்றை விளம்பரம் செய்வதை முழுமையாக நிறுத்தி விட்டேன். இப்போது எதை செய்கிறேனோ அதைப் பற்றிய மட்டுமே பேசுகிறேன்” என்றார்.