Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நான் இல்ல இவங்க தான் நேச்சுரல் ஸ்டார் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நானி ஹீரோவாகவும் எஸ் ஜே. சூர்யா வில்லனாகவும் நடித்துள்ள தெலுங்கு படம் ‘சரிபோதா சனிவாரம்'(சூர்யாஸ் சாட்டர்டே’) வருகிற 29ம் தேதி தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது அதில் பேசிய நேச்சுரல் ஸ்டார் என்றழைக்கப்படும் நானி, பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கு இறைவன் நவரச பாவங்களையும் வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய சிறிய கண் அசைவே ஏராளமான விசயங்களை சொல்லி விடும். அந்த அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அவர்தான் ‘நேச்சுரல் ஸ்டார்’. அவருடைய ரியாக்ஷன் நேச்சுரலாக இருக்கும். அவருடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவர் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கும் சாருலதா எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News