Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நானியின் ஹிட் 3 ஹிட் படத்தில் இணைந்த கே.ஜி.எப் பட கதாநாயகி! #HIT3

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2020ஆம் ஆண்டு தெலுங்கில் சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘ஹிட் – தி பர்ஸ்ட் கேஸ்’. இப்படம் மிகுந்த வெற்றி பெற்றதன் பின்னர், 2022ஆம் ஆண்டு “ஹிட் – தி செகண்ட் கேஸ்” என்ற இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது, இது மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.

இந்த படத்தின் இறுதியில், நடிகர் நானி மூன்றாம் பாகத்திற்கான முன்னோட்டமாக கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்குப் பின்பு, சமீபத்தில், சைலேஷ் கொலனு இயக்கத்தில், நானி நடிப்பில் ‘ஹிட் – தி தெர்டு கேஸ்’ உருவாகி வருகிறது என்றும், 2025ஆம் ஆண்டு மே 1ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்தனர்.

தற்போது, இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கே.ஜி.எப் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, இப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News