பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘கபாலி’, ‘வெற்றிச்செல்வன்’, ‘சித்திரம் பேசுதடி-2’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் பெனடிக்ட் டெய்லரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டில் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், பாலிவுட் சினிமாவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களைப் பற்றி ராதிகா ஆப்தே தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
“நான் கர்ப்பமாக இருந்த சமயம் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். என் கர்ப்பம் பற்றி தயாரிப்பாளருக்கு தெரிந்திருந்தும், இறுக்கமாக ஆடைகளை அணியும்படி அவர் கட்டாயப்படுத்தினார். வேறு வழியின்றி நானும் அதை ஏற்றுக்கொண்டேன். என்னைப் போன்ற பல நடிகைகளுக்கும் இதே மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் அதிகம் கோரிக்கைகள் விடுத்ததில்லை. கொஞ்சம் மனிதாபிமானத்தை தான் எதிர்பார்க்கிறோம். பாலிவுட் சினிமாவில் நடக்கும் இந்த கொடுமையான நடைமுறை விரைவில் மாற வேண்டும்,” என்று கூறியுள்ளார் ராதிகா.