கமல் ஹாசன் ஹீரோவாக நடித்த “கோகிலா” படத்தில் அறிமுகமான மோகன், ஒருகட்டத்தில் கமலுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்தார். அத்துடன், ரஜினிக்கும்கூட போட்டியாக இருந்தார். முக்கியமாக, மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக இருந்து வருகின்றன. பாடல்களில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது, இதனால் அவரை “மைக் மோகன்” என்று அழைத்தனர்.
அவரது கரியர் உச்சத்தில் இருக்கும் போது, திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டது, அவர் காணாமல் போனார். பல வருடங்கள் கழித்து, இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். விஜய் நடிக்கும் “GOAT” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, “ஹரா” படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கோகிலா” படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு, சில நாட்களுக்கு ஷூட்டிங்கிற்கு செல்லவில்லை. எனக்கு எப்போது ஷூட்டிங் என்பதே தெரியாது. கமலுடன் நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்ததால், அவர் காத்திருந்தார். பின்னர், என்னை தந்தி மூலம் வரவழைத்தனர். பதற்றமாக சென்ற நான் பாலுமகேந்திரா சாரிடம் பேசவில்லை.
அப்போது கமல் ஹாசன் வந்து, “நன்றாக நடிக்கிறாய், பிறகு ஏன் இப்படி செய்கிறாய்?” என்று கேட்டார். நான் “சார், எனக்கு ஷூட்டிங் என்பதே தெரியாது” என்று பதிலளித்தேன். உடனே, “ஒரு டைரி வைத்துக்கொள், என்னென்னைக்கு ஷூட்டிங் என்று அதில் குறித்துவைத்துக்கொள்” என்று கூறினார். அதன்படி செய்தேன். அதன்பின் ஒருநாள்கூட நான் கால்ஷீட்டை குழப்பியதே இல்லை” என்று பகிர்ந்துள்ளார்.