நடிகை நயன்தாரா கோலிவுட்டின் முக்கிய நடிகையாக உள்ளார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக ‘அன்னபூரணி’ படத்தில் நடித்திருந்தார். அது அவருடைய 75வது படம் ஆகும். பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் நயன்தாரா தனது முதல் படத்தை கொடுத்தார். தற்போது ‘மண்ணாங்கட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


மேலும், நயன்தாரா ‘கே.ஜி.எப்’ யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தில் யஷ்-க்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், நடிகர் கவினுடன் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், நயன்தாரா சமூக வலைதளங்களில் எந்த கணக்கையும் தொடங்காமல் இருந்தார். ஆனால் ‘ஜவான்’ படத்தின் போது தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார். பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் ‘நேசிப்பாயா’ படத்தின் விழாவில் கலந்துகொண்டு பலரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில், நயன்தாரா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்போது அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்களில் கருப்பு சட்டையில் சற்று கிளாமராக உள்ள நயனை கண்டு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசுகின்றனர்.