Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நம்ப வாய்ப்பை நம்ப தான் உருவாக்கணும்… சினிமா உலகம் ஒருத்தரையும் மதிக்காது – கருணாஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை. ஷார்க் 9 பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா கில்லாரி தயாரிக்க, இயக்குநர் மைக்கேல் கே ராஜாவின் அறிமுக இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கருணாஸ், “இயக்குநர் மைக்கேலின் திறமையே அவரது ஆணித்தரமான பேச்சின் காரணம். அவர் மிகவும் சிறப்பாக படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர்; நியூசிலாந்தில் சாதனை புரிந்த இந்தியர். 24 ஆண்டுகளாக நடிகராக இருப்பினும் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை,” என்று கூறினார்.

சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக் கதையை இப்படித்தான் வரவேண்டும் என பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார்.””என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது முதல் படம். ஹீரோக்களுடன் நடித்த எல்லா படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

இந்தக் கதையை கேட்டவுடன், இந்தப்படம் இறந்த பிறகும் பேர் சொல்லப்படும் படமாக இருக்கும் என என் குடும்பத்தினரிடம் கூறினேன்.””ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது. ஆனால் நாம் நடிக்க வேண்டும் என்றால் அது நடக்கும், அதுபோலவே இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி,” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News