சினிமாவில் வெற்றியும் தோல்வியும் இயல்பானதே, ஆனால் தொடர்ந்து தோல்வியை சந்திக்கின்ற நடிகர் ஒருவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகும் நிலை ஏற்படும். இவ்வாறான சூழல் தான் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஏற்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில், பல வருடங்களாக சினிமாவில் தன்னை சந்தித்த சிக்கல்களை பற்றி விரிவாக பேசினார். குறிப்பாக, ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் தன்னால் ஏற்பட்ட சிக்கல்களையும் நஷ்டங்களையும் பகிர்ந்தார்.

‘நண்பன்’ படத்தை ஷங்கர் சார் 6 மாதங்களில் முடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், படத்தை முடிக்க 8 மாதங்கள் ஆகிவிட்டது. இதற்கு முழு காரணம் நான்தான். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படுவது தெரியாமல், உதவி இயக்குநர் பேச்சைக் கேட்டு காலேஜ் போர்ஷன் என நினைத்து தாடி, மீசை எல்லாம் ஷேவ் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்தேன்.

என்னைப் பார்த்ததும் ஷங்கர் சார் அதிர்ச்சி அடைந்தார்.“நீங்கள் பெரிய ஆர்டிஸ்ட், பொறுப்பில்லாமல் இப்படி வருகிறீர்களே! ஷேவ் செய்ய வேண்டுமென்றால் படப்பிடிப்பு தளத்தில் செய்திருக்கலாமே,” என்று கூறி, கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க அவ்வளவு நாள் கால் ஷீட்டுகள் வீணாகி, மீண்டும் அந்த காட்சியை ஒன்றரை மாதங்கள் கழித்து ஷங்கர் சார் படமாக்கினார்,” என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.