Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நடிகர் பிரசாந்த்தின் அந்தகன் படத்தின் முதல் பாடலை வெளியிடுகிறாரா விஜய்? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்தாதூன் என்ற படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார் நடிகர் தியாகராஜன். பிரசாந்த் கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . இந்த படத்தில் கார்த்திக், சமுத்திரக்கனி, சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.‌ ஜூலை 24ம் தேதி மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அந்தகன் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய்யை வெளியிட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடிகர் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News