சமீபத்தில் மும்பை, நாக்பூர் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்த சோனு சூட்டின் மனைவி சோனாலி விபத்தில் சிக்கினார். உடனடியாக நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். தற்போது தனது மனைவியின் உடல்நிலை குறித்து சோனு சீட் வெளியிட்டுள்ள தகவலில், “என் மனைவி நன்றாக இருக்கிறார். மிகப்பெரிய விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.. ஓம் சாய்ராம்” என்று கூறியுள்ளார்.சோனு சூட்டுக்கும், சோனாலிக்கும் 1996ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அயான் மற்றும் இஷாந்த் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
