சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் சமீபத்தில் வெளியானது, இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில், இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த பெருமையை பெற்றுள்ளது. சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு மூன்றாவது பாகம் மற்றும் பல படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதே சமயம், அவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார்.


பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் “ஒன் 2 ஒன்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.


இதற்குப் பிறகு, படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலர் காட்சிகள் மிகவும் பரபரப்பாக அமைந்துள்ளன. அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி இருவரும் போட்டியுடன் நடிக்கும் மைண்ட் கேம் கதை இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் சுந்தர் சி நடிக்கும் 20 வது திரைப்படமாகும்.
அனுராக் காஷ்யப், லியோ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “மகாராஜா” படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்கம் ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர்.