பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் 2019-ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மகான்’ படத்தில் தந்தையுடன் நடித்தார். இந்தப் படம் வெற்றி அடைந்ததற்குப் பிறகு அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

தற்போது, துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிரமாக கபடி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.


மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.