Tuesday, November 19, 2024

தி கோட் படத்தின் ஸ்பார்க் பாடல் தமிழ்ல எப்படியோ… ஆனா ஹிந்தியில ரசிக்கிறாங்களாம் !!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட்‌பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘ஸ்பார்க்’ பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலும் விசில் போடு பாடலை போல் கலவையான விமர்சனங்களைப் பெற்ற பாடலாக அமைந்தது. இருப்பினும் தமிழில் அந்தப் பாடல் தற்போது 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழில் பெற்ற பார்வைகளில் பாதியளவு பார்வைகளை ஹிந்தியிலும் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஹிந்தியில் 4.5 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. ஹிந்தியில் இந்தப் பாடலை குனால் கஞ்சவாலா, யுவன் ஷங்கர் ராஜா, விருஷா பாலு பாடியுள்ளனர். ஹிந்திப் பாடலின் வரிகள், குனால் குரல் ஆகியவை தமிழை விடவும் ஈர்ப்பாக உள்ளதாக கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News