Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் வெளியானது… போஸ்டரில் சஸ்பென்ஸ் வைத்த படக்குழு! #TheGoat

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “தி கோட்” படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. முதல் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இரண்டாவது பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது “தி கோட்” படத்தின் மூன்றாவது பாடலின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மூன்றாவது பாடல் ஆகஸ்ட் 3ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் விஜயுடன் நடனமாடும் நடிகை யார் என்பது போஸ்டரில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் “தி கோட்” படத்தின் மற்றொரு அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News