பிரபாஸுடன் வெளிநாட்டில் திஷா பதானி டேட்டிங் செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், திஷா பதானி கையில் தற்போது புதிதாக உள்ள டாட்டூ பிரபாஸை அவர் காதலிப்பதை உறுதி செய்கிறது என பாலிவுட் முதல் டோலிவுட் வரை பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கல்கி திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ராக்ஸி எனும் கதாபாத்திரத்தில் வாம்மா மின்னல் என்பது போல வந்து செல்வார். பிரபாஸுடன் ஒரு பாடலில் மட்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கவர்ச்சிகரமான நடிக்க போகிறாரோ என்று ரசிகர்கள் பதட்டத்தில் இருந்தபோது , நாக் அஸ்வின் கொஞ்சம் டீசன்டான நீச்சல் உடையை கொடுத்து காப்பாற்றி விட்டார். இந்நிலையில், திஷா பதானி கையில் PD – என பிரபாஸ மற்றும் திஷாவை குறிக்கும் டாட்டூ புதிதாக இடம்பெற்றுள்ளது தான் இந்த காதல் கிசுகிசுவுக்கு காரணம் ஆகியிருக்கிறது.