Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

தர்ஷா பத்த வச்ச நெருப்பு… ஆர்னவ் மீது எரிந்து விழும் ஹவுஸ்மேட்ஸ்! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த பிக்பாஸ் சீசன் போல பண்ண பிளான் பண்ணிட்டாங்க கேர்ள்ஸ் டீம் என ரஞ்சித், தீபக், முத்துக்குமரன் என ஆண்கள் அணியில் உள்ள போட்டியாளர்கள் ஜாக்குலினின் தந்திரமான ஆட்டத்தை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த சீசனில் முதல் வாரம் பெண்கள் அணிக்கு சென்ற முத்துக்குமரன் சிக்குவார் என பார்த்த நிலையில், அவர் பெண்களுக்கு சப்போர்ட் செய்து பேசி அல்வா கொடுத்து விட்டார். 

ஆனால் தற்போது அப்படியே பெண்களுக்கு பெரும் எதிரிடாக மாறியுள்ளார் முத்துக்குமரன்.கடந்த சீசன் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பியது கடுமையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில், ஆண்கள் vs பெண்கள் என இந்த சீசனே சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், நிச்சயம் பெண்கள் ஆண் போட்டியாளர்களை அசிங்கப்படுத்தினால் விஜய் சேதுபதி கமல்ஹாசன் போலவே நடவடிக்கை எடுப்பாரா? அல்லது தீர விசாரித்து தனது முடிவை அறிவிப்பாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். 

கடந்த வாரமே ரவீந்தருக்கு பதில் ஜாக்குலின் தான் வெளியேறி இருக்க வேண்டும் என்றும் விஜய் டிவி பேவர் என்பதால் அவரை காப்பாற்றி விட்டனர். அதனை பயன்படுத்தி இந்த வாரம் ஜாக்குலின் ஓவர் ஆட்டம் போட்டு வருகிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் இந்த வாரமும் ஜாக்குலினை சோஷியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றனர். பிரியங்காவுக்கு இருந்தது போல இவருக்கு பெரிதாக ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோக்களை பார்த்தோம் என்றால் ஒரு ரேங்கிங் லிஸ்ட்டில் முதல் இடத்துக்கு ஆர்.ஜே.ஆனந்தி வி.ஜே.விஷால் மற்றும் முத்துக்குமரன் அவரவர் தரப்பு நியாயங்களை சொல்லி வாக்கு கேட்கின்றனர். அதேபோல் ஜெஃப்ரி தனது தரப்பு செயல்பாடுகளை சொல்லி வாக்கு கேட்க்கும்போது சிரிக்கின்றனர்.இதனால் மனமுடைந்த ஜெஃப்ரி தனிமையில் அழ அவருக்கு ஆறுதல் கூறுகிறார் வி.ஜே.விஷால். இதனைத்தொடர்ந்து தர்ஷா ஆண்களிடம் அர்னவ் -ஐ பற்றி சொல்லி பத்த வைக்க அந்த பிரச்சினை ஆண்கள் அணியிரிடம் பூதாகரமாக வெடிக்கின்றது. இப்படியே பரபரப்பாக இன்றைய நாள் நகரும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

Read more

Local News