கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார், விஜயின் பீஸ்ட் படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்ததால் சற்று தடுமாறினார்.
ஆனால் அவர் துவண்டு போகாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் என்ற பெரிய வெற்றிப் படத்தைத் தந்தார். மேலும், அவர் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “எனது 20வது வயதில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் நுழைந்தேன். இந்தத் துறையில் வளர்ச்சி அடைய மட்டுமே பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து உழைத்து வந்தேன். ஆனால் என்னுள் எப்போதும் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று எனது சொந்த நிறுவனமான ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எங்களது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின்மூலம், எங்களது முதன்மையான நோக்கம் என்பது புதுவிதமான மற்றும் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான படங்களை உருவாக்கி, பெரிய அளவிலான ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம். எங்களுடைய முழுமையான பார்வையைக் கொண்ட சினிமாக்களை இதன்மூலம் தயாரிக்க இருக்கிறோம். அது நிச்சயம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். எங்களது முதல் படம் பற்றிய அறிவிப்பு வரக்கூடிய மே 3ஆம் தேதி இருக்கும். அதுவரை காத்திருங்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி என நெல்சன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் இதைக்கண்டு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்..