Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்திலும் மிரள வைக்கபோகும் நடிப்பின் அரக்கன்… எஸ்.ஜே. சூர்யா லைன் அப் இதுதானாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் மட்டுமே ‘நடிப்பு அசுரன்’ ஆக நிரூபித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, இப்போது பிற மொழிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். தமிழிலும் அசரடிக்கும் லைன் அப்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்திய ‘இந்தியன் 2’ படத்தில் அவரது கதாபாத்திரம் கவனம் ஈர்த்ததைப் போல, அடுத்து வெளிவர உள்ள தனுஷின் ராயன் படத்திலும் கெத்தாக ஸ்கோர் பண்ணியிருப்பதாகத் தகவல். இப்போது ராம்சரண், நானி, விக்ரம், கார்த்தி, ராகவா லாரன்ஸ், பகத் பாசில் என பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

ஷங்கர்- கமல் கூட்டணியின் ‘இந்தியன் 2’வில் கமிட் ஆன போதே, தெலுங்கில் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் கமிட் ஆனார் எஸ்.ஜே.சூர்யா. அதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே தனுஷுடன் நடித்த ‘ராயன்’ படம் இம்மாதம் வெளியாகிறது. ‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களுக்கு பின்னர் இதில் ஒரு பெரிய பெயர் வரும் என்கிறார்கள். இந்த இடைவெளியில் தெலுங்கில் நானியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதன் வெளியீடு அடுத்த மாதம் இருக்கிறது. நானி, பிரியங்கா மோகன் நடித்த ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழில் ‘சூர்யாவின் சாட்டர் டே’ என்ற பெயரில் வெளியாகிறது.

விக்ரமுடன் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ படப்பிடிப்பு மதுரையில் 30 நாட்களுக்கு மேலாக நடந்து முடிந்தது. அதன் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ‘சித்தா’வை இயக்கிய அருண் குமார் இதனை இயக்கி வருகிறார். கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு பின் ராகவா லாரன்ஸுடன் மீண்டும் கைகோத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. படத்தின் பெயர் ‘பென்ஸ்’. இதன் படப்பிடிப்பும் டேக் ஆஃப் ஆக உள்ளது. கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் சர்தார் 2 விலும் நடிக்கிறார்.மேலும் விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத்திலும் ஸ்கோர் செய்யவிருக்கிறார். அங்கே ‘ஜெய ஜெய ஜெய ஹே’வை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார். இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இவை தவிர கமலின் ‘இந்தியன் 3’ படத்திலும் மெயின் வில்லனாக வரவிருக்கிறார். இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஊட்டியில் அதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

சமீபத்தில் விழா ஒன்றில் எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்த விஐபி ஒருவர், உங்க படங்கள் எல்லாம் தவறாமல் பார்க்கிறேன். நடிப்பில் அசத்துறீங்களே.. நடிப்பில் உங்களுக்கு சரியான தீனி அமைந்துவிட்டதா” என்று தன் கேள்வியை எழுப்பினார். அதற்கு எஸ்.ஜே.சூர்யா என்ன பதில் சொன்னார் தெரியுமா? இதுவரை நீங்க பார்த்த படங்களில் எல்லாம் என் நடிப்பு டீசர் போலத்தான். சிரித்துக்கொண்டே மெயின் பிக்சரை இனி வரும் படங்களில் தான் பார்க்கப்போகிறீர்கள் என்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News