Saturday, September 14, 2024

தமிழகத்தின் வெற்றிக்கான கொடியாகவே இக்கொடியை பார்க்கிறேன்… த.வெ.க கொடியை அறிமுகப்படுத்திய விஜய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார், அவர் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் கட்சியின் பெயரும், கொடியையும் மக்களிடம் பரப்ப நடவடிக்கைகளை தொடங்கினார். கடந்த 19ஆம் தேதி பவுர்ணமி நாளில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மஞ்சள் நிறத்தில் நடுவில் விஜயின் படம் இடம் பெற்ற கொடியை விஜய் கொடி கம்பத்தில் ஏற்றினார்.

இன்று, பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் கட்சி கொடியை அறிமுகம் செய்ததுடன், கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டார். கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களில் இரண்டு பிளிரும் போர் யானைகள் மற்றும் நடுவில் வாகை மலரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வுக்கு முன்னதாக, கட்சி சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதன்பின், விழாவில் விஜய் பேசியதாவது, இன்று அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள். கட்சி அறிவித்த நாள் முதல், இந்த மாநில மாநாடு நடக்கும் நாளுக்காக அனைவரும் காத்திருந்தனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் இந்த கொடிக்கான விளக்கத்தை அளிக்கின்றோம். இதை தமிழகத்தின் வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் உரையாற்றினார்.

- Advertisement -

Read more

Local News