Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் பிரியங்கா மோகன்… நன்றி தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட #NEEK படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் சமீபத்தில் “ராயன்” என்ற திரைப்படத்தை இயக்கியும் நடித்தும் இருந்தார். இந்தப் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. விமர்சகர்களாலும், வணிக ரீதியிலும் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த படத்தைத் தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற புதிய திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளார். இது ஒரு ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இந்த பாடலுக்கு “கோல்டன் ஸ்பேர்ரோ” என்ற தலைப்பை வைத்துள்ளனர். மேலும், இந்த பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என கூறப்படுகிறது. இதற்காக நன்றியுடன் படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது, அதில் பிரியங்கா மோகன் மடி சேரி லுக்கில் காட்சியளிக்கிறார். இதனால், இந்தப் பாடலின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News