தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை வியாபார எல்லை மற்றும் வசூல் ரீதியாக கர்நாடக திரையுலகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ரொம்பவே பின்தங்கி இருந்தது. சமீபவருடங்களாக கேஜிஎப் மற்றும் காந்தாரா உள்ளிட்ட படங்களின் அதிரடி வருகை காரணமாக கன்னட சினிமாவும் தற்போது பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.கன்னட திரைப்படங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்வதற்கும் தயாரிப்பாளர்களின் நலனை கருதியும் கர்நாடக அரசே புதிய ஓடிடி தளத்தையும் துவங்க உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கன்னட திரையுலகினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
