ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது, ஆனால் பாக்ஸ் ஆபீசில் ஏமாற்றத்தை கொடுத்தது. இதையடுத்து, உப்பெனா படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் தனது 16வது படத்தில் ராம்சரண் தற்போது நடித்து வருகிறார். இதில், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அவருக்கு ஜோடியாக நடிக்க, இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155709.png)
இந்த நிலையில், தனது 16வது படத்தின் செட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராம்சரண் தனது மகள் கிளின் காராவுடன் சென்று அந்த இடத்தை பார்வையிட்டுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155228-838x1024.jpg)
அது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “ஆர்சி 16 செட்டில் எனது சிறிய விருந்தினர்” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ராம் சரணின் ரசிகர்களால் வைரலாக பரவியுள்ளது.