தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவர் தனது 109-வது படத்தில் நடித்து வருகிறார்.
‘டாகு மகாராஜ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனர் பாபி கொல்லி இயக்கி உள்ளார். இந்த படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த நிலையில், பாலகிருஷ்ணாவின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘டாகு மகாராஜ்’ படமானது படைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு, பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ரூ. 132 கோடி வசூல் செய்தது. தற்போது, அந்த சாதனையை ‘டாகு மகாராஜ்’ படமானது முறியடித்ததாக கூறப்படுகிறது.