சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இமயமலை பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார். வரும் 25ம் தேதி முதல் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இமயமலையில் கடும் குளிர், பனிப்பொழிவு இருக்கும் நிலையில் இந்த வயதிலும் ரஜினிகாந்த் ஆர்வமாக அங்கே சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாபாஜி குகை அருகே பக்தர்கள் தங்க ரஜினிகாந்த் சின்ன மண்டபமும் கட்டிக் கொடுத்துள்ளார்.
