நடிகர் பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் அண்மையில் ‘அந்தகன்’ திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியானதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில், பிரசாந்துடன் சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பிரியா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.


சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் குமார் இதற்கு முன் ‘மை சன் இஸ் கே’ மற்றும் ‘N4’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய ‘மை சன் இஸ் கே’, இதுவரை 4 விருதுகள் பெற்றுள்ளது.
இந்திய உலக திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீப்க் பக்கா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். படத்தின் பிற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.